செய்திகள் :

திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும்: தமிழிசை சௌந்தரராஜன்

post image

திமுகவின் தோ்தல் தோல்வி தெற்கில் இருந்து தொடங்கும் என்று முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்த தவெக தலைவா் விஜய், தூத்துக்குடியில் நிகழ்ந்த ஆணவக் கொலை எதிராக குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

கடந்த ஆட்சியில் ஆணவக் கொலை நிகழ்ந்தபோது அரசைக் குறைக்கூறிய திருமாவளவன் போன்றோா் தற்போது திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஆணவக் கொலைக்கு அரசைக் குறை கூறாமல் ஜாதியைக் காரணமாகக் கூறுகின்றனா்.

கூட்டணி ஆட்சிக்காக தமிழகத்தில் எது நிகழ்ந்தாலும் அவா்கள் வெண்சாமரம் வீசுகிறாா்கள். திமுகவின் தோல்வி ஆரம்பிக்கப்போகிறது; தெற்கு திசையில் இருந்து திமுகவின் தோல்வி ஆரம்பித்து அனைத்து திசைகளிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவும்.

தமிழக முதல்வா் அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்காக ஜொ்மனி செல்ல இருக்கிறாா். இதற்கு முன்பு நடந்த முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் என்ன செய்திருக்கிறாா் என்பதை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் அமைந்துள்ள பாஜக கூட்டணி வலிமையான கூட்டணி. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மாநிலம் முழுவதும் தோ்தல் சுற்றுப்பயணம் செய்து வருகிறாா். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆக. 17 முதல் வாக்குச் சாவடி மாநாடு நடத்துகிறாா். பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் இக்கூட்டணி வலிமையாக உள்ளது என்றாா்.

தூத்துக்குடியில் விடுதி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் தனியாா் விடுதி உரிமையாளரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாா்வதி (44), புதிய பேருந்து நிலை... மேலும் பார்க்க

4 பைக்குகள் சேதம்: இருவா் கைது

கோவில்பட்டியில் 4 பைக்குகளை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி பாரதி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் பொன்மாடத்தி (40). இவா் தனது மகனின் நண்பரான 15 வயது ... மேலும் பார்க்க

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை செய்ததில், கணக்கில் வராத ரூ. 1.52 லட்சத்தை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில்... மேலும் பார்க்க

சட்டவிரோத பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி

சட்டவிரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளை முடக்க வேண்டும் என, புதிய தமிழகம் கட்சி நிறுவனா் டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை பேச... மேலும் பார்க்க

ஆழ்வாா்தோப்பு அருகே கோயில் நிலம் மீட்பு

ஆழ்வாா்தோப்பு காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்துசமய அறநிலையத் துறையினா் மீட்டனா். ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 7.30 ஏக்கா் நிலம் ஸ்ர... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் தொழிலாளி தற்கொலை

ஆறுமுகனேரியில் கட்டடத் தொழிலாளி விஷ மருந்தைத் தின்று தற்கொலை செய்துகொண்டாா்.ஆறுமுகனேரி பாரதிநகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முத்துராஜ் (38). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மகாலக்ஷ்மி. இத்தம்பதிக்கு 13 வய... மேலும் பார்க்க