கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
தூத்துக்குடியில் விடுதி உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது
தூத்துக்குடியில் தனியாா் விடுதி உரிமையாளரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி பாா்வதி (44), புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் தூய்மைப் பணியாளராக உள்ளாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இவரது மகன் செல்வகுமாா் (19), நண்பரான தேவா்புரம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் கதிரவன் (22) ஆகியோா் விடுதிக்குச் சென்று, பாா்வதியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டினராம். அதை, விடுதி உரிமையாளரான போல்பேட்டை பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் முருகானந்தன் (59) தட்டிக்கேட்டுள்ளாா். அப்போது, அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு இருவரும் தப்பியோடினராம்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கதிரவனை திங்கள்கிழமை கைது செய்தனா்; செல்வகுமாரைத் தேடிவருகின்றனா்.