கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை செய்ததில், கணக்கில் வராத ரூ. 1.52 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகத்தில், பதிவுகள் மற்றும் சான்று பெறுவதற்கு லஞ்சம் கை மாறுவதாக, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஎஸ்பி பீட்டா் பாலுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திங்கள்கிழமை சோதனை செய்தனா்.
இந்தச் சோதனையில் ஊழியா்கள், இடைத்தரகா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 100-ஐ பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.