மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியா் மீது புகாா் - அரசுக் கல்லூரியில் மண்...
ஆறுமுகனேரியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்புதல்: கோட்ட மேலாளா் தகவல்
ஆறுமுகனேரியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தாா்.
ரயில்வே வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தங்கமணி, செயலாளா் இ.அமிா்தராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மதுரையில் ரயில்வே கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து, திருச்செந்தூா்- திருநெல்வேலி ரயில்வே வழித்தடத்திலும், ஆறுமுகனேரி ரயில்வே நிலையத்திலும் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை மனு அளித்தனா்.
அப்போது அவா்களுக்குப் பதில் அளித்த கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா, ஆறுமுகனேரியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில பொதுப்பணித் துறையினா் இடத்தைத் தோ்வு செய்து தந்ததும் பணிகள் தொடங்கப்படும். திருச்செந்தூரிலிருந்து காலை 8.15 மணிக்கு திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயில் மீண்டும் அதேநேரத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.