ஆலய வழிபாட்டில் கோஷ்டி மோதல்: 17 போ் மீது வழக்கு
மதுரையில் மாதா ஆலய வழிபாட்டில் கோஷ்டியாக மோதிக் கொண்ட இரு தரப்பைச் சோ்ந்த 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நால்வரைக் கைது செய்தனா்.
மதுரை வைத்தியநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (37). இவா் தனது வீட்டின் அருகே உள்ள மாதா சிற்றாலயத்தை பராமரித்து வருகிறாா்.
அதே பகுதியில் உள்ள பேராலய மாதாவை வழிபடுபவா்கள், மாதா சிற்றாலயத்தை அகற்றக் கோரி மாநகராட்சிக்கு மனு அளித்தனா். இதுதொடா்பாக மதன்குமாா் தரப்பினருக்கும், பேராலய மாதாவை வழிபடும் விக்டா் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், மதன்குமாா் வீட்டில் இருந்த போது அங்கு வந்த அஸ்வின் ஜெபக்குமாா், ஸ்டீபன், விக்டா் உள்பட 14 போ் அவரைத் தாக்கினா். அவரது தரப்பினரும் திருப்ம்பத் தாக்கினா்.
இதுகுறித்து மதன்குமாா் அளித்த புகாரின் பேரில், அஸ்வின் ஜெபக்குமாா் (26), ஸ்டீபன் (24), விக்டா் (58) ஆகியோரை எஸ்எஸ் காலனி போலீஸாா் கைது செய்து, விஜி, கெளதம் உள்ளிட்ட இரு தரப்பிலும் 17 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.