'இந்தியா அடுத்து ஜெர்மனியை தாண்டுவது மட்டும் முக்கியமல்ல...' - ஆனந்த் மஹிந்திரா கூறுவது என்ன?
சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின் படி, இந்தியா ஜப்பானை முந்தி உலக அளவில் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரம் என்கிற இடத்தை பிடித்துள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். தற்போது இந்தியாவின் பொருளாதாரம் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டதாக மாறி உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...
"நான் வணிக கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா ஜப்பானை முந்துவது பெரும் கனவாக இருந்தது. ஆனால், இப்போது இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடு.

இது சிறிய சாதனை அல்ல
இது சிறிய சாதனை அல்ல. ஜப்பான் நீண்ட காலமாக புகழ் பெற்ற உற்பத்தி திறனாகவும், மீள்தன்மையுடனும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்து வந்தது. பல ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இந்தியர்களின் லட்சியம் மற்றும் புத்திசாலித்தனம் தான் நாம் இதை அடைவதற்கு காரணம் ஆகும்.
நாம் இதை கொண்டாடும்போது மிக மகிழ்ச்சியாக இருந்துவிடக் கூடாது.
இந்தியாவின் அடுத்த பாய்ச்சல், ஜெர்மனியை முந்துவதாக மட்டும் இருக்கக் கூடாது. தனிநபர் உற்பத்தி திறனை அதிகரிப்பதாக இருக்க வேண்டும்.
நாம் தொடர்ந்து முன்னேறி கொண்டிருக்க நிர்வாகம், உள்கட்டமைப்பு, கல்வி, உற்பத்தி, முதலீடு என அனைத்திலும் போதுமான பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா கொண்டிருக்க வேண்டும்". என்றார்.
When I was in business school, the idea of India overtaking Japan in GDP felt like a distant, almost audacious dream. Today, that milestone is no longer theoretical — we’ve become the world’s fourth largest economy.
— anand mahindra (@anandmahindra) May 25, 2025
It’s no small achievement. Japan has long been an economic… pic.twitter.com/28LgnC4Osx