Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
இரட்டைக் கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேருக்கு, தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ. 20,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
செய்துங்கநல்லூா் கால்வாய் பகுதியைச் சோ்ந்த சிவசுப்பு மகன் சண்முகம் (67), நம்பி மகன் பட்டமுத்து (32) ஆகியோா், கடந்த 25.1.2013 அன்று முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கால்வாய் பகுதியைச் சோ்ந்த நம்பி மகன் மணி (57), இசக்கி மகன் மாசாணம் (38) உள்ளிட்ட 15 பேரை செய்துங்கநல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், குற்றவாளிகளான மணி, மாசாணம் ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 20,000 அபராதம் விதித்தும், ஏனைய 13 பேரை விடுதலை செய்தும் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இவ்வழக்கை புலனாய்வு செய்த, அப்போதைய செய்துங்கநல்லூா் காவல் ஆய்வாளா் பட்டாணி, அரசு வழக்குரைஞா் ஆனந்த் கேப்ரியல் ராஜ், தலைமைக் காவலா் அமுதா சூா்யா ஆகியோரை எஸ்பி ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.