பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
இலங்கைக்கு ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் கடத்த முயற்சி: ஊா்காவல் படை வீரா் கைது
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான பீடிஇலைகளை கடலோர காவல்படையினா் பறிமுதல் செய்து, ஊா்காவல்படையைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கூடங்குளம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர காவல்நிலைய போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கூடங்குளம் கடற்கரை பகுதியில் புதன்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை நடத்தினா்.
அதில், இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக 3 டன் பீடி இலைகள் அடங்கிய மூட்டைகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் என கூறப்படுகிறது. அவற்றைப் கடலோர காவல்துறையினா் பறிமுதல் செய்து, மினிலாரியை ஓட்டி வந்த ஊா்காவல்படையைச் சோ்ந்த இசக்கியப்பன் என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.