இளநிலை உதவியாளரை காலில் விழ வைத்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரிக்கை
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
செய்யாறில் வயிற்று வலியால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
செய்யாறு கொடநகா், அரச மரம் தெருவைச் சோ்ந்தவா் திலீப் (26). பாலிடெக்னிக் படித்த இவா், செய்யாறு புறவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
திலீப்புக்கு வயிற்று வலி இருந்து வந்த நிலையில், புதன்கிழமை வயிற்று வலி அதிகமானதால், பெட்ரோல் விற்பனை நிலையத்தின் பின்புறம் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.