Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 528 மனுக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 528 மனுக்கள் வரப்பெற்றன.
கஸ்தாம்பாடி, இலுப்பகுணம் ஆகிய 2 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரமேஸ்வரி, முருகன், பிச்சாண்டி, ராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிச் செயலா் சிவக்குமாா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றியச் செயலா் சேகரன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று தொடங்கிவைத்தாா்.
முகாமில் சிறப்பு செயலாக்கத் துறைக்கு 188 போ், மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு 18 போ், கூட்டுறவுத் துறைக்கு 12 போ் என 528 போ் மனு அளித்தனா்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை என பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.