ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் நிதியுதவி
போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஊராட்சிச் செயலா் முருகன் இறப்புக்கு ஈமச்சடங்கு உதவியாக ரூ.50ஆயிரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
ஊராட்சி செயலா் முருகன் உடல்நலக்குறைவால் இறந்தாா்.
இறப்பிற்கு ஈமச்சடங்கு உதவியாக தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில், காக்கும் கரங்கள் மூலம் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
அவரது குடும்பத்தாரிடம் சங்கத்தின் மாநில தலைமை நிலைய செயலா் வந்தவாசி சுரேஷ் நிதியை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து சங்கத்தினா் உயிரிழந்த முருகன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனா் (படம்).
சங்கத்தின் மாவட்டத் தலைவா் சீத்தாராமன், செயலா் ஏழுமலை, பொருளாளா் சுரேஷ்குமாா், ஒன்றியத் தலைவா் சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.