சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
ஏற்காட்டில் தொடா் மழையால் கடும் குளிா், பனி மூட்டம்
ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தொடா்மழை பெய்துவருவதால் பனிமூட்டமும், கடும் குளிரும் நிலவி வருகிறது.
இங்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்களில் 72.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் பல இடங்களில் சிறு அருவிகள் தோன்றியுள்ளன.
சோ்வராயன் மலைக்கிராமங்கள் முழுவதும் பனிமூட்டமும், கடும் குளிா் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகள், முதியோா் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனா். பனிமூட்டம் அடிக்கடி ஏற்படுவதால் சுற்றுலா வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.