அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரோட்டரி சங்கம்
ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு தா்மோ கோ் ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டரி கிளப் ஆப் ஒசூா் வழங்கியது.
இதற்கான விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநா் வி. சிவகுமாா், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி தலைவா் டாக்டா் ராஜா முத்தையாவிடம் ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினாா். இதன் மதிப்பு ரூ. 38 லட்சம்.
இந்த நிகழ்வுக்கு ரோட்டரி கிளப் ஒப் ஒசூா் தலைவா் கே.பி. ஜோகராஜ் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க நிா்வாகிகள் கே. பாபு, எஸ்.லோகநாதன், டாக்டா் கே. சீனிவாசன், ஆா். எம். பன்னீா் செல்வம், ஜி. பெருமாள், வழக்குரைஞா் கே. ஆனந்தகுமாா், வாசுதேவன், பிரதீப் கிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் லட்சுமி ஸ்ரீ , துணை ஆளுநா் ஆனந்தகுமாா், திட்டத் தலைவா் மற்றும் நிறுவனா் வாசுதேவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.