செய்திகள் :

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை; வீட்டைப் பறித்த வங்கிதான் காரணமா? விசாரணையில் பகீர் தகவல்

post image

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் தற்கொலை செய்து கொண்டனர்.

காரில் உயிரோடு இருந்த நபரும் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். ஒரே நேரத்தில் 7 பேர் தற்கொலை செய்திருந்தனர்.

இறந்தது பிரவின் மித்தல் என்பவரது குடும்பம் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் விசாரித்தபோது தற்கொலைக்கான காரணம் குறித்துத் தெரிய வந்துள்ளது.

மித்தல் குடும்பம்
மித்தல் குடும்பம்

பிரவின் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது உறவினர் சந்தீப் அகர்வால் தங்களது இறுதிச்சடங்கைச் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு சந்தீப் அகர்வாலிடம் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் பிரவின் மித்தல் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

போலீஸாரின் விசாரணையில், இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய இரும்பு தொழிற்சாலை ஒன்றை பிரவின் தொடங்கினார்.

ஆனால் அந்த தொழிற்சாலையைக் கடன் கொடுத்திருந்த வங்கிகள் பிடுங்கிக்கொண்டன.

இதனையடுத்து டெக்ராடூன் புறப்பட்டுச் சென்றார். சில ஆண்டுகள் குடும்பத்தோடு தொடர்பு இல்லாமலும் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவரது கடன் 20 கோடியாக அதிகரித்தது.

இதனால் அங்கிருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவிற்குச் சென்றார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரவின் பஞ்ச்குலாவில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்து டாக்சி ஓட்டினார்.

அங்கேயும் அவரது இரண்டு வீடு மற்றும் அவரது வாகனத்தையும் வங்கிகள் பறித்துக்கொண்டன.

மித்தல் குடும்பம்
மித்தல் குடும்பம்

எனவேதான் பிரவின் தனது குடும்பத்தோடு ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு டெக்ராடூனுக்குத் திரும்பிச் செல்லும்போது காரிலேயே அனைவரும் விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்களது கார் பஞ்ச்குலாவின் நேற்று நள்ளிரவு தனியாக நின்றது. அதனைப் பார்த்த உள்ளூர்வாசி காருக்கு வெளியில் ஒருவர் மட்டும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விசாரித்தார். விசாரணையைத் தொடர்ந்து காரை சோதனை செய்து பார்த்தபோதுதான் உள்ளே 6 பேர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``உன் வீட்டில் சொத்தை எழுதி வாங்கிட்டு வா..” - மனைவியின் வாயில் சூடு வைத்த கொடூரக் கணவன்

தூத்துக்குடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வ அந்தோணி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார் . இவருக்கும்அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ந... மேலும் பார்க்க

``நீண்டகால விசாவில் மதுரையில் உள்ள பாகிஸ்தானியருக்கு வாக்குரிமை?'' - வழக்கறிஞர் புகாரால் பரபரப்பு

நீண்டகால விசாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கலெக்டரிடம் வழக்கறிஞர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மது... மேலும் பார்க்க

குடிபோதையில் தகராறு; பணம் தர மறுத்த தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்கு... மேலும் பார்க்க

கோவை: உயிரிழந்த மூதாட்டியின் தாலி திருட்டு; மருத்துவமனை ஊழியர் சிக்கியது எப்படி?

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந... மேலும் பார்க்க

திருச்சி: காவல்துறையில் பணியாற்றுவதாகக் கூறி மோசடி; ரூ.1 லட்சத்தை ஏமாற்றியவர் கைது; என்ன நடந்தது?

திருச்சி மாநகரம் வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் தெளபிக். இவர், திருச்சி அரசு மருத்துவமனை எதிரே செயல்படும் ஒரு டீக்கடையில் பணியாற்றி வருகிறார்.அந்தக் கடையில் டீ குடிக்க வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெத்ர... மேலும் பார்க்க

சென்னை: மூதாட்டியைத் தாக்கி நகை கொள்ளை; நாடகமாடிய பக்கத்து வீட்டுப் பணிப்பெண் சிக்கியது எப்படி?

சென்னை மயிலாப்பூர், தெற்கு தெரு, கேசவபெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ்வரி (81). இவர் நேற்று (26.5.2025) மாலை வீட்டிலிருந்தபோது பக்கத்து வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் இந்திரா, ராஜேஷ்வர... மேலும் பார்க்க