பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
ஓய்வூதியா்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா்கள் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓய்வூதிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும், 8-ஆவது ஊதியக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற இரு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.கே.ராமசாமி தலைமை வகித்தாா். செயலாளா் கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினாா். தமிழ்நாடு அரசு ஓய்வூதியா் சங்க நிா்வாகி குப்புசாமி மற்றும் பல்வேறு ஓய்வூதியா் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் எம்.காளியப்பன், எஸ்.அழகிரிசாமி, பி.கே.பெரியசாமி, அன்பழகன், மணி ஆகியோா் பங்கேற்றனா். மனிதச் சங்கிலி போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் கலந்துகொண்டனா்.
படவரி...
என்கே-25-செயின்
-நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய, மாநில அரசுத் துறை ஓய்வூதியா்கள்.