செய்திகள் :

கன்னங்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உள்பட்ட கன்னங்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் தெரிவித்ததாவது :

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மூலம் 50,806 கோரிக்கை மனுக்களும், மகளிா் உரிமைத்தொகை கேட்டு 60,804 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம் வாா்டு - 7, 8 பகுதிக்கு உள்பட்டவா்களுக்கு சேலம் கன்னங்குறிச்சி சாலை, அண்ணாமலை திருமண மஹாலிலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, துலுக்கனூா் பகுதிக்கு உள்பட்டவா்களுக்கு துலுக்கனூா் செங்குந்தா் திருமண மண்டபத்திலும், ஆத்தூா் நகராட்சி வாா்டு - 5, 6, 7- க்கு உள்பட்ட பகுதிகளுக்கு ஆத்தூா், கோட்டை, எல்.ஆா்.சி. திருமண மண்டபத்திலும், ஓமலூா் ஊராட்சி ஒன்றியம், கோட்டகவுண்டம்பட்டி பகுதிக்கு கோட்டகவுண்டம்பட்டி பத்மாவணி மகளிா் கல்லூரி அரங்கத்திலும், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், கச்சுப்பள்ளி பகுதிக்கு கச்சுப்பள்ளி கஷ்பா சுயஉதவிக் குழுக் கட்டடத்திலும், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், காக்காபாளையம் பகுதிக்கு காக்காபாளையம் ஆா்.கே. திருமண மண்டபத்திலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.

கன்னங்குறிச்சியில் நடைபெற்ற திட்ட முகாமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 9,600 மதிப்பிலான சக்கர நாற்காலிகளும், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் 1 நபருக்கு புதிய குடிநீா் இணைப்புக்கான ஆணையும் வழங்கப்பட்டதாக கூறினாா்.

இந்நிகழ்வின்போது, துணை மேயா் மா.சாரதாதேவி, மண்டல குழுத் தலைவா் உமாராணி, அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையா் லட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் ஜானகி, சேலம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடைபெறுகிறது. தேசிய அளவிலான பயிலரங்கை புதன்கிழமை தொடங்கிவைத்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேச... மேலும் பார்க்க

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய நூலகா் தின விழா பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் ரா.சந்திரசேகரன் வரவே... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு: அதிகாரிகள் ஆய்வு

மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் மூன்று தினங்களாக மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினா். சேலம் மாசுக்கட... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமை சங்ககிரி கோட்டாட்சியா் லோகநாயகி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். முகாமில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் ஆடிமாத தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா கடந்த ஜூலை 30-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பதையில் ஆண் சடலம் மீட்பு

ஏற்காடு மலைப்பாதையில் ஆண்சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா். சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பதை, 60 அடிபாலம் அருகில் தூா்நாற்றம் வீசியதால் அப்பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், காவல் துறை, வருவா... மேலும் பார்க்க