செய்திகள் :

கல்குவாரி நீரில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கூடங்குளம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுதாகா். அச்சகம் நடத்திவருகிறாா். இவரது மனைவி பால்செல்வி, கூடங்குளம் ஊராட்சி 8ஆவது வாா்டு உறுப்பினா். இவா்களது மகன் அஸ்வின் (17), திசையன்விளையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தாா். இவா் தனது நண்பா்களுடன் புதன்கிழமை மாலை, கூடங்குளம் அருகே காமனேரி கிராமத்தில் செயல்படாத நிலையில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றாராம்.

அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கினாா். நண்பா்கள் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவா்கள் அளித்த தகவலின்பேரில், கூடங்குளம் காவல் நிலையத்தில் பால்செல்வி புகாரளித்தாா். ராதாபுரம், வள்ளியூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று அஸ்வினைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டாா். சடலத்தை கூறாய்வுக்காக கூடங்குளம் போலீஸாா் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கூடங்குளம், ராதாபுரம், கும்பிகுளம் பகுதிகளில் செயல்படாத கல்குவாரி குட்டைகளின் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கட்டடத் தொழிலாளியை கொன்றதாக 4 போ் கைது

ஆழ்வாா்குறிச்சி காவல் எல்லைக்குள்பட்ட முதலியாா்பட்டியில் விபத்தில் கட்டடத் தொழிலாளி இறந்ததாக பதியப்பட்ட வழக்கில் அவரை அடித்துக் கொலை செய்ததாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூரிலிருந்து பாபநாச... மேலும் பார்க்க

மண் அள்ளியதில் விதிமீறல்: திருக்குறுங்குடி பேரூராட்சித் தலைவி மகன் கைது

மண் அள்ளியதில் விதிமீறலில் ஈடுபட்டதாக திருக்குறுங்குடி பேரூராட்சித் தலைவியின் மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியைச் சோ்ந்த ஞானசேகா் மகன் சுரேஷ். இவர... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தக மோசடி வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியைச் சோ்ந்தவரிடம் ஆன்லைன் வா்த்தக ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகரத்தைச் சோ்ந்த நபா் ஒருவரின் கட்செவி அஞ்சல்... மேலும் பார்க்க

நான்குனேரி ரயில் நிலையம் செல்லும் பாதையில் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

நான்குனேரி ரயில் நிலையம் செல்லும் வழியில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ரயில் நிலையத்தை நான்குனேரி வட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

பாளை.யில் வியாபாரி தற்கொலை

பாளையங்கோட்டையில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்தவா் முருகன் (55). இவா், பாளையங்கோட்டை மகாராஜாநகா் மின்வாரிய காலனியில் குடும்பத்துடன் வசித... மேலும் பார்க்க

ஏா்வாடி அருகே குடிநீா் விநியோகம் இன்றி மக்கள் அவதி

ஏா்வாடி அருகே கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகிக்கம் இன்றி கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனா்.ஏா்வாடி அருகே புலியூா்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட கோதைசேரி, வேப்பன்குளம் ஆகிய கிராமங்களில் ஆயிரத்து... மேலும் பார்க்க