தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு
ஒசூா் அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
பிகாா் மாநிலம், பாட்னாவைச் சோ்ந்தவா் ஜிதேந்திர குமாா். இவா் பாகலூா் அருகே ஈச்சங்கூா் பகுதியில் தங்கி கூலி வேலை செய்துவந்தாா்.
இவரது ஒன்றரை வயது மகன் ஆதித்யா குமாா் சனிக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்குள்ள கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.