தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
வாலிபால் போட்டி: ஒசூா் யோகி வேமன்னா பள்ளி சிறப்பிடம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் எம்.கே.ஜே. தனியாா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ஒசூா் யோகி வேமன்னா பள்ளி இரண்டாம் இடம் பெற்றனா்.
எம்.கே.ஜே. தனியாா் கல்லூரியில் வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றன. மாநில அளவிலான வாலிபால் போட்டியில் ஒசூா் யோகி வேமன்னா பள்ளி இரண்டாம் இடம் பிடித்தது.
இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஒசூா் யோகி வேமனா பள்ளி கடலூா் சென்டன்ஸ் மேல்நிலை பள்ளியிடம் 23/25, 23/25 என நோ்செட் கணக்கில் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தை பிடித்தனா்.
மாநிலத்திலே இரண்டாம் இடத்தை பிடித்த யோகி வேமன்னா பள்ளி மாணவிகளையும் மற்றும் பயிற்சியாளா் மாணிக்கவாசகனையும் பள்ளியின் தலைவா் முனிரெட்டி, உடற்கல்வி ஆசிரியா் காா்த்திக் ஆகியோா் பாராட்டினா்.