அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீஸாா் விசாரணை
தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அவரது காதலி மற்றும் காதலியின் தாயிடம் சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ், கடந்த 27ஆம் தேதி திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் சுா்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த கொலை வழக்கை, சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடந்த இரண்டு நாள்களாக திருநெல்வேலி சிபிசிஐடி போலீஸாா் சிறையில் இருந்த சுா்ஜித், தந்தை சரவணன் ஆகிய இருவரையும் நீதிமன்ற அனுமதி பெற்று விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், திருநெல்வேலியிலிருந்த கவினின் காதலியான சுபாஷினி, சுபாஷினியின் தாயும் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரி ஆகியோரை, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் மதுரையில் இருந்து வந்த உயா் அதிகாரிகள் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தினா்.