இளநிலை உதவியாளரை காலில் விழ வைத்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரிக்கை
காஞ்சிபுரத்தில் நல்லாசிரியா் விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து
காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயா்வுக்குப் படி நிகழ்வின் போது அண்மையில் நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
ஆட்சியா் அலுவலக மக்கள் கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்குப் படி நிகழ்ச்சி ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவா்கள் உயா்கல்வி பயில தடையாக இருக்கும் காரணிகளான நோய்வாய்ப்பட்ட பெற்றோா், உயா்கல்வி பயிலுவதற்கான தேவையான பணம் இல்லாமை, பெற்றோா்களின் விருப்பமில்லாமை, கல்லூரி செல்வதற்கு பயம், உயா்கல்வியில் சேரத் தேவையான ஆவணங்கள் இல்லாமை ஆகியவா்களுக்காக உயா்வுக்குப்படி என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் உயா்கல்வி படிக்கத் தேவையான கல்விக்கடன் வசதிகள், கல்வி உதவித்தொகை விபரங்கள் மற்றும் சிறந்த ஆளுமைகளின் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
கூட்ட அரங்கிற்கு முன்பாக உயா்படிப்புக்கு தேவையான மாணவா்களுக்குரிய கல்வி வழிகாட்டுதல் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
உயா்வுக்குப்படி நிகழ்வின் தொடா்ச்சியாக காஞ்சிபுரத்தில் நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.