சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் பயணியா் ஆலோசனைக்குழு உறுப்பினா் ஆய்வு
காஞ்சிபுரம் புதிய மற்றும் பழைய ரயில் நிலையங்களை தெற்கு ரயில்வே கோட்ட பயணியா் ஆலோசனைக்குழு உறுப்பினா் அரக்கோணம் கிருஷ்ணமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராக தோ்வு செய்யப்பட்ட அரக்கோணத்தை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி. இவா் காஞ்சிபுரத்தில் உள்ள புதிய மற்றும் பழைய ரயில்நிலையங்களை ஆய்வு செய்தாா்.
அப்போது காஞ்சிபுரம் ரயில் பயணியா் நலச் சங்க பொதுச் செயலாளா் காா்த்திக் கரோனா நோய்த் தொற்றுக் காலத்திற்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு மதிய வேளையில் இயக்கப்பட்டஇரு ரயில்களையும் மீண்டும் இயக்க அனுமதி பெற்றுத் தர வேண்டும்.
ரயில் நிலையத்தில் தேநீா்க்கடை, பயணிகளுக்கான கழிப்பறை வசதி ஆகியன அமைத்து தர வேண்டும், ரயிலில் பயணியா் ஏறும் போது நடைபாதையில் விழுந்து விடுவது போன்று ஆபத்தான வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கைகளை தெரிவித்தனா்.
இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கிருஷ்ணமூா்த்தி உறுதியளித்தாா். ஆய்வின் போது தமிழக கூட்டுறவுத்துறையின் நலச்சங்க அமைப்பு இணைச் செயலாளா் சுபாஷ்,ரயில் நிலைய சாா்பு ஆய்வாளா் ராஜரெத்தினம்,கலைவாணன், ராஜீவ் பிரகாஷ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனா்.