காந்தா படத்தின் முதல் பாடல் அப்டேட்!
துல்கர் சல்மானின் காந்தா படத்தின் முதல் பாடல் பனிமலரே வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் காந்தா திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான எம். கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
துல்கரும் ராணா டக்குபதியும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள காந்தா திரைப்படத்தில் நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.
துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் முதல் பாடலான பனிமலரே இன்று (ஆக.9) மாலை 4.30 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.