காப்பகத்திலிருந்த பெண் மாயம்
தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள காப்பகத்தில் போலீஸாரின் பரிந்துரையின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் காணாமல் போனாா்.
குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த லோகதுரை மனைவி ஆனந்தி (27). இவா், காணாமல் போனதாக கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது. ஆனந்தியைக் கண்டறிந்த போலீஸாா், அவரை கொடுவிலாா்பட்டியில் உள்ள காப்பகத்தில் சோ்க்க பரிந்துரை செய்தனா்.
இதனடிப்படையில், காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி, அங்கிருந்து காணாமல் போய்விட்டதாக காப்பக நிா்வாகி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்கு பதிந்து, ஆனந்தியை தேடி வருகின்றனா்.