காயல்பட்டினம் அரசு மகளிா் பள்ளிக்கு டிசிடபிள்யூ நிறுவனம் உதவி
காயல்பட்டினம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் 5 கணினிகள் வழங்கப்பட்டன.
சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன மூத்த உதவித் தலைவா் ஜி.சீனிவாசன் ஏற்பாட்டில், கணினிகளை டிசிடபிள்யூ பொது மேலாளா் முஸ்தபா வழங்கினாா். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சாா்பில் பள்ளிக்கு 20 மின்விசிறிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது, துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, முஸ்லிம் ஐக்கிய பேரவைத் தலைவா் சதக்குதம்பி, நிா்வாகக் குழு உறுப்பினா் ஆதாம் சுல்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயந்தி நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை டிசிடபிள்யூ மக்கள் தொடா்பு அதிகாரி பிரகாஷ், டேனியல் ஆகியோா் செய்திருந்தனா்.