காரைக்குடி விளையாட்டரங்கில் அழகூட்டும் மரக்கன்றுகள் நடவு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதி சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள தமிழக முதல்வரின் அரசு சிறு விளையாட்டரங்கத்தில் நவீன அழகூட்டும் பனை வகை மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விளையாட்டரங்க வளாகத்தில் நவீன பனை வகை (ராயல் பால்ம் ட்ரீ) மரக்கன்றுகள் நடுவதற்கு சமூக ஆா்வலா் நடேசன் குழுவினா் ஏற்பாடு செய்தனா். இதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்து 260 மரக் கன்றுகள் வரவழைக்கப்பட்டன.
இதையடுத்து, மரக்கன்று நடும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து, நிகழ்வைத் தொடங்கி வைத்தாா்.
காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன், பொருளாளா் கே.என். சரவணன், துணைத் தலைவா் ஜிடிஎஸ். சத்தியமூா்த்தி, சமூக ஆா்வலா்கள் ஆதிஜெகநாதன், சாந்தி, சுழல்சங்கத் தலைவா் லோகநாதன், செயலா் தேனப்பன், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.