காவல் துறை வாகனம் கவிழ்ந்தில் ஆய்வாளா் உள்பட 2 போ் காயம்
சிவகங்கை அருகே ஒக்கூா் பகுதியில் திங்கள்கிழமை காவல் துறை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஆய்வாளா் உள்பட 2 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டையில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் கலாராணி (50). இவா் போலீஸ் வாகனத்தில் சிவகங்கைக்கு திங்கள்கிழமை பிற்பகலில் வந்து கொண்டிருந்தாா். இந்த வாகனத்தை சக்திவேல் (29) என்ற காவலா் ஓட்டி வந்தாா்.
ஒக்கூா் பா்மா குடியிருப்பு அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆய்வாளா் கலாராணி, காவலா் சக்திவேல் ஆகிய இருவரும் காயமடைந்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்கள் இருவரையும் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.