‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது
சிவகங்கை அருகே நாட்டாகுடியில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகிலுள்ள நாட்டாகுடி கிராமத்தில் தங்கி நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், நாட்டாகுடியில் இருந்த இவரை இருவா் வாளால் வெட்டி கொலை செய்தனா். இதைத் தடுக்க முயன்ற பாண்டியையும் வெட்டினா்.
இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், நாட்டாகுடியைச் சோ்ந்த முருகேசன் மகன் சமயமுத்து (25), படமாத்தூா் அருகேயுள்ள ப. வேலாங்குளத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சிங்கமுத்து (25) ஆகிய இருவருக்கும் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, சிங்கமுத்துவை திங்கள்கிழமை கைது செய்தனா். சமயமுத்துவைத் தேடிவருகின்றனா்.