உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உயா்நீதிமன்றம் உத்தரவு!
குழந்தை வரம் தரும் பிள்ளைத்தாச்சி அம்மன்!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பல்வேறு வடிவங்கள், புற்றுருவாக உள்ள அம்மன் கோயில்கள் பல உண்டு. ஆனால், நிறைமாதக் கர்ப்பிணி படுப்பதுபோல், மல்லாந்து படுத்தநிலையில் சுயம்பு வடிவில் ஸ்ரீஅங்காளம்மன் அருள்பாலிக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட புட்லூரிலுள்ள பிள்ளைத்தாச்சி அம்மன் கோயிலில்தான்.
இங்கு கோயில் பூசாரி அம்மன் திருப்பாதத்தில் வைத்து, எலுமிச்சைப் பழத்தை உருட்டிவிடுவார். அந்தப் பழத்தை முட்டிப் போட்ட நிலையில், சேலை முந்தானையில் பிடித்து கீழே விழாதபடி பிடித்து பூசாரி தரும் வேப்பிலையையும் வாங்கி, கோயில் மண்டபத்தில் தம்பதியினர் பழத்தையும் வேப்பிலையையும் சாப்பிட வேண்டும்.
"முதல் வாரம் மட்டும் கணவனுடன் வர வேண்டும். அடுத்து எட்டு வாரம் மனைவி மட்டும் வந்து, அம்மனைத் தரிசித்து எலுமிச்சைப் பழம், வேப்பிலையைச் சாப்பிட்டால் குழந்தைப் பேறு சுகப் பிரசவத்துடன் நிச்சயம்' என்கிறது தல வரலாறு. இங்கு எலுமிச்சை பழ வழிபாடு சிறப்புடையதாகும்.
கடலூர் உ.இராசமாணிக்கம்