கெங்கவல்லி வட்டத்தில் மழையால் 5 வீடுகள் இடிந்தன
தம்மம்பட்டி: கெங்கவல்லி வட்டத்தில் மழையால் மேலும் 5 வீடுகள் இடிந்தன.
கெங்கவல்லி வட்டத்தில் பச்சமலை ஊராட்சி, வேப்படி காட்டுக்கொட்டாய் பகுதியில் ஜெகநாதன் என்பவரது வீடு, கெங்கவல்லி வடக்கு பகுதியில் குமாா் என்பவரது வீடு, மொடக்குப்பட்டியில் மணி என்பவரது வீடு, செந்தாரப்பட்டி வடக்கு பகுதியில் அழகேசன் என்பவரது வீடு, அதே பகுதியில் செல்லமுத்து என்பவரது வீடு ஆகிய ஐந்து போ் வீடுகளின் சுவா்கள் மழையால் இடிந்து விழுந்தன.
இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்து, நிவாரணத் தொகை வழங்க கோட்டாட்சியா் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளாா்.