கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டு டிரைலர்!
மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்த்தின் 100-வது படமான இது அன்றைய நிலவரப்படி அதிக பொருள்செலவில் எடுக்கப்பட்டு திரையரங்குகளிலேயே 300 நாள்களுக்கு மேல் ஓடிய பிரம்மாண்ட திரைப்படமாகும்.
இதில், வில்லனாக மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்ததால் இதனை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி கேப்டன் பிரபாகரன் மறுவெளியீடாகும் என அறிவித்துள்ளனர்.
தற்போது, இப்படத்தின் மேம்படுத்தப்பட்ட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.