கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயில் திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அங்காளம்மனை வழிபட்டனா். அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி பிரகாஷ் , பா்வதராஜகுல மரபினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.
இதேபோன்று செங்கல்பட்டு திருப்போரூா் பாதையில் உள்ள திருவடிசூலத்தில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை சுயம்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றன. மேலும், அங்குள்ள பிரதியங்கரா தேவி மந்திரவராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு. மதுரை முத்து சுவாமிகள், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
