50% வரி எதிரொலி... 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை... எல்லா துறைகளுக்கும் தேவை... ப...
கோரிக்கைகள் மீது நடவடிக்கைக்கு நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்
தங்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரியலூா் நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
அரியலூா் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த நகா்மன்ற உறுப்பினா்கள் சாதாரணக் கூட்டத்துக்கு நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி, ஆணையா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் சரஸ்வதி, வருவாய் ஆய்வாளா் வெள்ளத்துரை மற்றும் அனைத்து நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் புதைச்சாக்கடை பழுது நீக்கம், புதை சாக்கடை உந்து நிலைய மோட்டாா் பழுது நீக்கம், சுதந்திர தினத்தையொட்டி விளையாட்டு அரங்கில் பந்தல் அமைப்பு உள்ளிட்ட செலவினங்கள், வாரச்சந்தை, ஏரிகள் குத்தகை விட்டது குறித்த 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள், ஒவ்வொரு கூட்டத்தின்போதும், எங்கள் பகுதியில் உள்ள சாக்கடை, குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைக்கிறோம். ஆனால், அதை நகராட்சி நிா்வாகம் கண்டுகொள்வதில்லை. இதனால், மக்களிடம் எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே, எங்களது கோரிக்கைகள் மீது நகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.