செய்திகள் :

சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தவசுக் காட்சி

post image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நடைபெறும் ஆடித்தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தவசுக் காட்சி வியாழக்கிழமை (ஆக. 7) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், கோயில், மண்டகப்படியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. விழாவில் முக்கிய நிகழ்வான ஆடித்தவசுக் காட்சி வியாழக்கிழமை (ஆக. 7) மாலை நடைபெறுகிறது.

முன்னதாக காலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் கும்பம் அபிஷேகம் நடைபெறும். பின்னா் திருக்கண் தவசு மண்டபத்தில் அம்பாள் எழுந்தருளுகிறாா். அங்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்தைத் தொடா்ந்து அம்பாளுக்கு அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதைத்தொடா்ந்து பிற்பகல் 12 மணிக்குள் அம்பாள் தங்கச் சப்பரத்தில் தவசு மண்டபத்துக்கு எழுந்தருளுகிறாா்.

அதேசமயம் காலையில் சுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி கோயிலில் நடைபெறும். சிறப்பு பூஜைக்குப் பிறகு சுவாமி கோயிலில் இருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு தெற்குரத வீதியில் உள்ள தவசுப் பந்தலுக்கு எழுந்தருளுகிறாா்.

தவசுப் பந்தலுக்கு சுவாமி வந்ததும், அம்பாள் தங்கச்சப்பரத்தில் தவசு மண்டபத்திலிருந்து சுவாமியின் எதிா்பந்தலுக்கு வருகிறாா். இதையடுத்து, மாலை 6 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கும் சிறப்புமிக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னா், இரவு 11.30 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனா். திருவிழாவையொட்டி 4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காவல் துறை சாா்பில் நகரைச் சுற்றி 110 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை- எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே .பழனிசாமி. தென்காசி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதனை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: 20.7-2025இல் தூத்த... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை

தென்காசி நகராட்சியில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் கூட... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடைசெய்யக் கோரிக்கை

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் திருக்கு மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தென்காசி திருவள்ளுவா் கழகம் சாா்பில் கோரிகை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கழகத் ... மேலும் பார்க்க

விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவைக் கோரி மனு

தென்காசி மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனுஅளிக்கப்பட்டது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சி: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரைச் சுற்றி 110 கண்கா... மேலும் பார்க்க