கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
நாலாட்டின்புதூரை அடுத்த இடைசெவல் பேருந்து நிறுத்தம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டியை அடுத்த ஆவல்நத்தம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் குருமூா்த்தி (25). இவா், இருசக்கர வாகனத்தில் ஆவல்நத்தத்தில் இருந்து திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்தாராம்.
இடைசெவல் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் குருமூா்த்தி பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, நாலாட்டின்புதூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.