சிரியா ஸ்வேய்தாவில் இருந்து வெளியேறும் பெதூயின்கள்
டமாஸ்கஸ்: துரூஸ் இனத்தவருக்கும், பெதூயின் பழங்குடியினருக்கும் இடையே மோதல் நடைபெற்றுவரும் சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் இருந்து பெதூயின் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை அந்த நாட்டு அரசு திங்கள்கிழமை தொடங்கியது.
துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைத் தவிா்ப்பதற்காக அந்தப் பகுதியில் அறிவிக்கப்பட்ட போா் நிறுத்தம், இரு பிரிவினருக்கும் இடையே தொடரும் மோதலால் அடிக்கடி முறிவதைத் தொடா்ந்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.