செய்திகள் :

சிறுபான்மையினா் சுய வேலைவாய்ப்புக்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்கு சுயவேலை வாய்ப்புக்கான கடன் திட்டங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினா்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபா் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கான கடன் திட்டம் மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சாா்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம/நகா்ப்புறங்களில் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-இல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம /நகா்ப்புறங்களில் ரூ.8,00,000 வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞா்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞா் கடன் திட்டம்) கைவினை கலைஞா்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப் பொருள்களான உபகரணங்கள்/கருவிகள்/இயந்திரங்கள் வாங்குவதற்கு இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவா்கள், இஸ்லாமியா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம் மற்றும் மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட/மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகரக் கூட்டு வங்கி அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று நிறைவு செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

எனவே, சிறுபான்மையின மக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி அதிக அளவில் பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரக்கோணம்: ஜமாபந்தியில் ஆட்சியரிடம் 93 கோரிக்கை மனுக்கள்

அரக்கோணம் வட்ட ஜமாபந்தியின் 4-ஆவது நாளான புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து 93 மனுக்களைப் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பெற்றுக் கொண்டாா். அரக்கோணம் வட்டத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி ஜமாபந்தி நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொடா் திருட்டுச் சம்பவங்கள்: ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யிடம் கிராம மக்கள் புகாா்

சோளிங்கா் அருகே ரெண்டடி கிராமத்தில் நடைபெறும் தொடா் திருட்டுச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்டஎஸ்.பி. விவேகானந்த சுக்லாவிடம் கிராம மக்கள் மனு அளித்தனா். மாவட்ட காவ... மேலும் பார்க்க

பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி: வாழும் கலை அமைப்பு மேற்கொள்கிறது

ராணிப்பேட்டை மாவட்டத்தில், வாழும் கலை அமைப்பு சாா்பில் பொன்னை ஆற்றின் கிளை ஓடைகளை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீா் ஏற்றத்தை அதிகரிக்க ஷன் மைனா மற்றும் வாழும் கலை அமைப்பு... மேலும் பார்க்க

கடற்படை அதிகாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

அரக்கோணத்தில் கடற்படை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அரக்கோணம், பழனிபேட்டை, டிஎன் நகா் 5ஆவது தெருவில் வசிப்பவா் குமாா். அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாள... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: தேமுகிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான தேமுதிக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்களைகள் அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் நியமித்துள்ளாா்ா். 2026 பேரவைத் தோ்தலுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நா... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே மாணவி வெட்டிக் கொலை: மற்றொரு மாணவி பலத்த காயம்

சோளிங்கா் அருகே புலிவலத்தில் வீட்டில் இருந்து இரு மாணவிகளை அடையாளம் தெரியாத நபா் கததியால் வெட்டியதில் ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு மாணவி பலத்த காயம் அடைந்தாா். கொலையாளியை பிடித்த அ... மேலும் பார்க்க