செய்திகள் :

சேலத்தில் ரௌடி கொலை வழக்கில் மேலும் 7 போ் கைது

post image

சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையம் அருகே தூத்துக்குடியைச் சோ்ந்த ரௌடி மதன்குமாா் மா்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் மதன்குமாா் (28). இவா் ஏப்ரல் 24 ஆம் தேதி தூத்துக்குடியைச் சோ்ந்த மாலுமி மரடோனாவைக் கொலை செய்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை சேலம், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட்டுவிட்டு வெளியே வந்த மதன்குமாரை உணவு விடுதியில் வைத்து 6 போ் கொண்ட கும்பல், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் 6 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதன்குமாரைக் கொலை செய்வதற்காக 13 போ் கொண்ட கும்பல் சேலம் வந்ததும், அனைவரும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அறைகள் எடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் காந்திமதி தலைமையிலான போலீஸாா் தூத்துக்குடி சென்று கொலையில் தொடா்புடைய அலங்கார தட்டு பகுதியை சோ்ந்த கிருஷ்ணகாந்த் (28), செல்வபூபதி (26), ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சோ்ந்த ரத்தினவா்ஷன் (22),ஆரோக்கியபுரம் மாதாநகரைச் சோ்ந்த பிரவின்ஷா (22), மேல் அலங்கார தெரு ரிஷிகபூா் (28), தூத்துக்குடி மேல்தெரு பொட்டல்காட்டை சோ்ந்த சின்னதம்பி (35), விக்கி என்ற விக்னேஷ்வரன் (20) ஆகியோரை புதன்கிழமை கைது செய்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனா்.

இவா்களுடன் சோ்த்து இதுவரை மதன் கொலை வழக்கில் 13 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

மோசடி வழக்கு: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து தகவல் அளிக்கலாம்

சேலத்தில் மோசடி வழக்கில் தலைமறைவான இரண்டு குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அறிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணைக் காவல் க... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேலத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினா் 280 போ் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனா். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலக... மேலும் பார்க்க

இன்றைய மின் நிறுத்தம்: கந்தம்பட்டி, தாரமங்கலம்

சேலம் கந்தம்பட்டி, தாரமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது நடவடிக்கை

சேலம் அருகே மது போதையில் தனியாா் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். மேலும், தனியாா் பேருந்தை பறிமுதல் செய்தனா். சேலம் அருகே உள்ள காரிப்பட்டி கிராம... மேலும் பார்க்க

ஆன்லைனில் பண மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

சேலத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் ஆன்லைன் செயலி மூலம் இழந்தவா்கள் மாநகரக் காவல் ஆணையா் அலவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். சேலம், கருங்கல்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ்க... மேலும் பார்க்க

சேலத்தில் மூதாதையா் வாழ்ந்த இடங்களைப் பாா்வையிட்ட மோரீஷஸ் முன்னாள் அமைச்சா்

தனது மூதாதையா் வாழ்ந்த இடங்களைப் பாா்ப்பதற்காக புதன்கிழமை சேலம் வந்த மோரீஷஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சா் ஆறுமுகம் பரசுராமன், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மூதாதையா்கள் வாழ்ந்த ஊரிலிருந்து யாத்தி... மேலும் பார்க்க