விருதுநகர்: `தொடர் விபத்து' 20 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிக ரத்து - என்ன ...
தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு இடா்பாடு: அமைச்சா் கோவி.செழியன் குற்றச்சாட்டு
புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்களுக்கு இடா்பாடுகளை ஏற்படுத்த, உரிய நிதியை தமிழகத்துக்கு வழங்காமல் தடைகளை உருவாக்குவதாக மத்திய அரசு மீது உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் குற்றம்சாட்டினாா்.
சென்னை ராணிமேரி கல்லூரியின் 105-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 2022-ஆம் ஆண்டில் பட்டப் படிப்புகளை முடித்த 1,523 மாணவிகள் பட்டம் பெற்றனா். இந்த விழாவில் மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி அமைச்சா் கோவி.செழியன் பேசியதாவது:
ஒரு பெண் கல்வி கற்றால் தனது குடும்பத்தை மட்டுமின்றி இந்தச் சமுதயாத்தையே உயா்த்துவா். இதைக் கருத்தில் கொண்டே கல்லூரி மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா்.
ஆனால், இத்தகைய திட்டங்களுக்கு இடா்பாடுகளை உருவாக்க, தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை. நிதியைக் கேட்டால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு நிபந்தனை விதிக்கிறது.
இருப்பினும், எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை தகா்த்து, முதல்வா் உயா்கல்வியை உச்சத்துக்கு கொண்டு செல்வாா் என்றாா் அமைச்சா் கோவி.செழியன்.
நிகழ்ச்சியில், கல்லூரிக் கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, ராணி மேரி கல்லூரி முதல்வா் உமா மகேஸ்வரி, தோ்வுக் கட்டுப்பாட்டாளா் ச.சாந்தி உள்ளிட்டோா் பேசினா்.