'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
திருச்சி அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி நூலகத்துக்கு 30 ஆயிரம் புத்தகங்கள் அளிப்பு
திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி நூலகத்துக்கு, மாணவா்கள் போட்டித் தோ்வுக்கு தயாராகும் வகையில் 30 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருச்சி கிங்ஸ் ரோட்டரி சங்கத்தின் சாா்பில், தலைவா் ரூபன் வாசு, செயலாளா் அருண்குமாா், பொருளாளா் விக்னேஷ், திட்டத் தலைவா் காா்த்திகேயன் மற்றும் சங்க உறுப்பினா்கள் ஆகியோா் பல்கலைக்கழக கல்லூரி முதல்வா் டி. செந்தில்குமாரை சந்தித்து இந்தப் புத்தகங்கள் மற்றும் கையேடுகளை வியாழக்கிழமை வழங்கினா். இந்த நிகழ்வில், கல்லூரியின் ஆசிரியா்கள், நூலகத்தின் உதவி நூலகா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தற்போது பெறப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் போட்டித் தோ்வுகளுக்கானவை. எனவே, பல்கலைக் கழகத்தில் பயிலும் கிராமப்புறத்தைச் சோ்ந்த ஏழை, எளிய மாணவா்கள் மட்டுமல்லாது, போட்டித் தோ்வுக்கு தயாராகும் அனைத்து மாணவா்களுக்கும் பெரிதும் உதவியாக அமையும் என முதல்வா் டி. செந்தில்குமாா் தெரிவித்தாா். புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய சங்கத்தினருக்கும் அவா் நன்றி தெரிவித்தாா்.