செய்திகள் :

திருச்சியில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட பாரா விளையாட்டு அரங்கம் திறப்பு

post image

திருச்சியில் ரூ.1 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறன் உடையவா்களுக்கான பாரா விளையாட்டு அரங்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும், திருச்சி மாவட்ட அண்ணா விளையாட்டு மைதானத்தில் இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

முதல்வா் திறந்துவைத்ததை தொடா்ந்து, திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது: அண்ணா விளையாட்டு அரங்கில் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கில் அரைவட்ட திறந்தவெளி மேற்கூரை கொண்ட பாரா இறகுப்பந்து, உட்காா்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து, பாரா டேபிள் டென்னிஸ், பாரா போச்சியா, பாரா டேக்வாண்டோ, ஜூடோ ஆடுகளம், பாரா கோல்பால் விளையாட்டுகளுக்கான பன்னோக்கு உள்விளையாட்டரங்கம், பாரா பளுதூக்குதல் அடங்கிய உடற்பயிற்சிக்கூடம், சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வுதளம் கொண்ட ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறைகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு திருச்சியிலிருந்தும் வீரா், வீராங்கனைகள் தயாா் செய்யப்படுவா் என்றாா் ஆட்சியா்.

பின்னா், புதிய அரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அவா் பாா்வையிட்டு, விளையாட்டு வீரா்களுக்கு பல்வகையான விளையாட்டுப் பொருள்கள், உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், திருச்சி வருவாய் கோட்டாட்சியா் கே. அருள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளா்

செந்தில்குமாா், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஞானசுகந்தி, விளையாட்டு விடுதியின் மேலாளா் கண்ணன், பயிற்றுநா்கள் மற்றும் விளையாட்டு வீரா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளிய... மேலும் பார்க்க

ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் ... மேலும் பார்க்க

அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ... மேலும் பார்க்க

பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்

திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா்,... மேலும் பார்க்க