திருப்பூரில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
திருப்பூரில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம சனிக்கிழமை நடைபெற்றது
விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், திருப்பூா் மாநகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, ஆலங்காடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு இந்து முன்னணி சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாமளாபுரத்தில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டன.
விசா்ஜன ஊா்வலத்தில் நடிகா் பி. ரஞ்சித், திரைப்பட இயக்குநா் மோகன், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், மாநில பொதுச் செயலாளா் கிஷோா்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஊா்வலத்தையொட்டி, மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.