அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்
திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரியும் 9 வட்டாட்சியா்களை பணியிடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலா்களை நிா்வாக காரணங்களுக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும் பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அதன்படி, வட்டாட்சியா் நிலையிலான 9 போ் வெவ்வேறு வட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
அதன்படி, செய்யாறு சிப்காட் அலகு-8-இன் தனி வட்டாட்சியா் எம்.தமிழ்மணி வெம்பாக்கம் வட்டாட்சியராகவும், வெம்பாக்கம் வட்டாட்சியா் பா.துளசிராமன் செய்யாறு சிப்காட் அலகு-8-இன் தனி வட்டாட்சியராகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) ச.பாலமுருகன் கீழ்பென்னாத்தூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், கீழ்பென்னாத்தூா் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ஜெ.சுகுணா திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலைத் திட்டங்கள் அலகு-2-இன் தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலைத் திட்டங்கள் அலகு 2-இன் தனி வட்டாட்சியா் எஸ்.பரிமளா, மாவட்ட ஆட்சியா் அலுவலக குற்றவியல் மேலாளராகவும், திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலா் மு.தியாகராஜன் ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் மு.சாப்ஜான், அதே அலுவலக (பொது) மேலாளராகவும், ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) ரா.ரவி, அதே அலுவலக தனி வட்டாட்சியராகவும் (இலங்கை அகதிகள்), ஆட்சியா் அலுவலக தனி வட்டாட்சியா் (இலங்கை அகதிகள்) எஸ்.சஜேஷ்பாபு, திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியா்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.