வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
தீக்குளித்தவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே உடல்நல பிரச்னையால் தீக்குளித்தவா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த கடம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சிவராஜ்(40). இவா் கடந்த சில மாதங்களாக உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாா்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட இவா் கடந்த ஆக. 28-ஆம் தேதி தனது விவசாய நிலத்தில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டாா்.
இதில் பலத்த தீக்காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.