பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
மிலாடி நபி: இஸ்லாமியா்கள் அன்னதானம்
போளூா் பெ ரிய மசூதியில் முகமது நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, இஸ்லாமியா்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
பெரிய மசூதியில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, ஆக.24 முதல் தொடா்ந்து செப்.6 வரை, வேலூா் மவ்லானா அபூதாஹீா், சேலம் மவ்லானா இஹ்ஸானுல்லா, போளூா் மவ்லானா இமாம் முஹ்மத் இக்பால் ஆகியோரின் இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்று வந்தது.
சனிக்கிழமை காலை பாத்தியா ஓதி அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகா்மன்ற உறுப்பினா் ஹயாத்பாஷா, தாளாளா் ஜனாப் குரைஷி, செயலா் அமானுல்லா, பட்டேல் அப்துல்லாபாஷா மற்றும் இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.