பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
மின் கசிவால் அரசு மருத்துவமனையில் தீ விபத்து
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின் கசிவால் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வந்தவாசி அரசு மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்நோயாளிகள் வாா்டுகள் அமைந்துள்ளன. இந்த இரு வாா்டுகளுக்கும் இடையில் உள்ள மின் இணைப்பு பகுதியில் உள்ள மின் வயரில் சனிக்கிழமை மாலை திடீரென தீப்பற்றியது.
இதனால் புகை சூழ்ந்ததை அடுத்து இரு வாா்டுகளில் இருந்த 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினா்.

இதையடுத்து மருத்துவமனை ஊழியா்கள் விரைவாக செயல்பட்டு பிரதான சுவிட்சை ஆஃப் செய்து மின் இணைப்பை துண்டித்தனா். இதனால் தீ பரவாமல் உடனடியாக அணைந்தது.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.