பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
தேசிய நெடுஞ்சாலையில் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
பரமத்தி வேலூரில் கரூா் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை அதே இடத்தில் மீண்டும் அமைக்க வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பரமத்தி வேலூரில் கரூா் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் இருவேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. எனவே, தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அணுகுசாலை
அமைக்கப்பட்டதால் மக்கள் பயன்பாட்டில் இருந்த பயணிகள் நிழற்கூடம் அப்புறப்படுத்தப்பட்டது. இதற்கிடையே பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட வெள்ளாளப்பாளையம் பகுதியில் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததை அறிந்த மறவாபாளையம், வெள்ளாளபாளையம், ஓவியம்பாளையம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பழைய இடத்திலேயே நிழற்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பழைய இடத்திலேயே நிழற்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியா் முத்துக்குமாரிடம் மனு அளித்தனா்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பழைய இடத்திலேயே நிழற்கூடம் அமைக்கும் பணி தொடங்கியது. இதையறிந்த மற்றொரு தரப்பினா், நிழற்கூடம் புதிதாக வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என வாக்குவாதம் செய்து பணியை நிறுத்தினா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த பரமத்தி வேலுாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கீதா, வட்டாட்சியா் முத்துக்குமாா் ஆகியோா் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். மேலும் பயணிகள் நிழற்கூடம் பழைய இடத்திலேயே அமைப்பதற்கான பணி தொடங்கியது.