செய்திகள் :

தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்: இங்கிலாந்தில் அபாரம்!

post image

ரிஷப் பந்த் இங்கிலாந்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.

மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கிய நான்காவது டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் கூட்டணி நிதானமாக விளையாடியது. உணவு இடைவெளிக்குப் பிறகு ராகுல் 46 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்தும் சாய் சுதா்சன் - ரிஷப் பந்த் இணை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சோதித்த நிலையில், க்றிஸ் வோக்ஸ் வீசிய பந்து ரிஷப் பந்த்தின் காலில் பட்டதில் அவர் காயமடைந்தார்.

வலியில் தவித்த ரிஷப் பந்த் ’ரிட்டையா்டு ஹா்ட்’ முறையில் வெளியேறிய நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும், ஜடேஜா 20 ரன்களில் ஆட்டமிழக்க அவருக்குப் பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் சிறிது நேரம் போராடி 27 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அறிமுகப் போட்டியி விளையாடி கம்போஜ் ரன் ஏதுமின்றி வெளியேற நிதானமாக விளையாடிய தாக்குர் 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இந்தநிலையில், காயத்திலிருந்து மீண்டு வந்து பேட்டிங் ஆடி அசத்திய ரிஷப் பந்த், அரைசதம் விளாசி வியக்க வைத்தார். அவர் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தநிலையில், மான்செஸ்டரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக புதன்கிழமை தொடங்கிய நான்காவது டெஸ்ட்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களமிறங்கியதன் மூலம் எஸ்.இ.என்.ஏ நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய அணிக்காக அதிக முறை 50+ ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார்.

அவர் மேற்கண்ட நாடுகளில் 14 முறை 50 அல்லது அதற்கும் மேலான ரன்களைத் திரட்டியுள்ளார். முன்னாள் வீரர் எம். எஸ். தோனி 13 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்; மீதமிருப்பது சச்சின் மட்டும்தான்!

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 ... மேலும் பார்க்க

மான்செஸ்டர் டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, 332 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது ... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ஜோ ரூட் சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று... மேலும் பார்க்க

சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து வீரர் புதிய சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர் ஈஷ் சோதி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. முத்தரப்பு டி20 ... மேலும் பார்க்க