செய்திகள் :

நகைக்கடை ஊழியா் வீட்டில் திருட்டு

post image

திருப்பத்தூரில் நகைக்கடை ஊழியரின் வீட்டில் 6 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் தில்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (35). இவா் திருப்பத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் வெங்கட்ராமன் தனது குடும்பத்தினருடன் மேல்மலையனூா், திருவண்ணாமலை ஆகிய பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்குத் திரும்பியுள்ளாா்.

வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தும் சிதறிய நிலையில் கிடந்துள்ளன. மேலும் பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவை காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து வெங்கட்ராமன் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வெங்கட்ராமன் குடும்பத்தினா் வீட்டில் இருந்து வெளியே செல்லும் பொழுது, வீட்டின் சாவியை அங்கு ஏதேனும் ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு செல்வது வழக்கம்.

இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் சாவியை எடுத்து வீட்டில் உள்ள நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கி... மேலும் பார்க்க

தவறான சிகிச்சை: மருத்துவமனைக்கு நோட்டீஸ்

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய... மேலும் பார்க்க

தண்டையாா்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மணலியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் ஆலையில் சுத்திகரி... மேலும் பார்க்க