‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்துக்காக மருத்துவ விவரம் பெற தடை கோரி வழக்கு
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்காக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ விவரங்களை நிரந்தரமாக நீக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சத்தியகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், மக்களின் வரிப்பணத்தில் அரசுப் பணியாளா்களைக் கொண்டு செயல்படுத்தும் திட்டங்களுக்கு முதல்வரின் பெயரைச் சூட்டுவது தவறானது. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தோ்தல் வரவுள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் பெயரை தனிப்பட்ட முறையில் பிரபலப்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்படுகின்றன.
எனவே, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்காக, பொதுமக்களின் மருத்துவ விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் தன்னாா்வலா்கள் மூலம் பெறப்படுகின்றன. இது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களிடம் மருத்துவ விவரங்களைப் பெற தடை விதிக்க வேண்டும். ஏற்கெனவே
பெறப்பட்ட மருத்துவ விவரங்கள் அடங்கிய தரவுகளை நிரந்தரமாக நீக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.